உணவுப் பாதுகாப்பிற்காக இலங்கை உடனடியாக நிலையான விவசாயத்தை நோக்கி நகர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.
உலக உணவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் நீர் வளங்களுக்கான அபாய நிலை தொடர்ந்தும் அதிகமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நன்னீர் வளங்கள் மற்றும் அவற்றின் நிலைத் தன்மையை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டிலுள்ள மொத்த நன்னீரில் 82 சதவீதமானவை நெல் விவசாயத்துக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக உலக உணவுத் திட்டத்தின் அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.