கல்பிட்டியில் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இருவர் கைது!

காரைதீவு மற்றும் கல்பிட்டி பள்ளியாவத்தை கடற்பகுதிகளில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 2 சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படையினர் விஜயா மூலம் காரைதீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்பகுதியில் இடைமறித்து, டிங்கி படகில் 15 மூடைகள் கடத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளை கண்டுபிடித்ததுடன், அதில் 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளியாவத்தை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட மேலும் ஏழு மூடைகள் கடத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் கடற்படை நடவடிக்கைகளுக்கு பதில் கடத்தல்காரர்கள் அவற்றை கைவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 43 மற்றும் 46 வயதுடைய கல்பிட்டியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்கள், கடத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply