வீழ்ச்சி அடைந்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டில் வாழும் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆண்டிற்கு மூன்றுமுறை நடத்தப்படுகின்ற தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21வீதமாக இருந்த நிலையில் அது நவம்பர் மாதத்தில் 9 வீதமாக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளமை குறித்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

அதே போன்று அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற காரணியும் நான்கு மாதங்களில் 12 வீதத்தில் இருந்து 6 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் பொருளாதார நம்பிக்கைக்கான சுட்டெண்ணும் 62இல் இருந்து 44 வீதமாக சரிந்துள்ளமையும் தெரியவருகின்றது.

இதன்படி அனைத்து அம்சங்களிலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சியும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என்பதைகுறித்த கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தப்படுகின்றன.

இதற்கமைவாக குறித்த ஆய்விற்காக நாடு முழுவதிலிமுள்ள மக்களிடம் கருத்துகள் கோரப்பட்டு அவை தொகுக்கப்படடு அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply