பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியன் கட்சிக்கு தோ்தல் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, அது தொடா்பான மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது.
பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமிய கட்சியாக வங்கதேச ஜமாத்-ஏ-இஸ்லாம் விளங்குகிறது. இந்தக் கட்சி அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் மதச்சாா்பின்மைப் பிரிவுக்கு எதிராகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பான வழக்கை அந்நாட்டில் உள்ள டாக்கா உயா்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு விசாரித்து, தோ்தலில் போட்டியிட அக்கட்சிக்குத் தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அக்கட்சி மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அக்கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, அக்கட்சியின் மனுவை ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது.
பங்களாதேஷின் நாடாளுமன்றத் தோ்தல் ஜனவரி 7 ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. (04)