எரிபொருள் விலை அதிகரிப்பு- நாமல் காட்டம்!

எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விலையை உயர்த்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தெளிவற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததால்தான் விலையை உயர்த்தியதாக அரசாங்கம் காரணம் கூறுகிறது.

ஆனால், விலை உயர்த்தப்பட்டு 24 முதல் 48 மணிநேரத்திற்குள் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கின்றது.

45 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு இருந்தால், ஏன் இவ்வளவு அவசரமாக விலையை உயர்த்த வேண்டும்.

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே மக்கள் மீது இந்தச் சுமையை அரசாங்கம் சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply