அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் உக்ரைன் தலைநகருக்குத் திடீர்ப் பயணம்

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் சென்றுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்குச் சென்றுள்ளார்

கீவில் உள்ள அமெரிக்கத் தூதருடன் ஆஸ்டின் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் தலைவர்களைச் சந்திக்கவும் ஒரு முக்கியமான செய்தியை வழங்கவும் நான் இன்று இங்கு வந்துள்ளேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைன் நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அமெரிக்கா அவர்களுடன் இப்போதும் எதிர்காலத்திலும் தொடர்ந்து துணை நிற்கும், என்று ஆஸ்டின் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்டினின் இந்த பயணம், சுதந்திரத்துக்கான போராட்டத்தில் உக்ரைனுக்கான அசைக்க முடியாத ஆதரவை உலகுக்கு தெரிவிப்பதாக அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் கூறினார்.

எனினும் அறிவிப்பில்லாத அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளரின் உக்ரைன் பயணம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply