ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது – ஜனாதிபதி!

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் எதுவும் பிற்போடப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கிரிக்கட் நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம். எனவே, தேர்தலுக்கு பயப்படுகிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தலை நடத்துவோம். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. அவை எதுவும் ஒத்திவைக்கப்படாது எனவும் அடுத்த வருடம் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தலாம். எந்த பிரச்னையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெருந்தோட்டங்கள், தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஆண்டுக்கு 1000 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்திருந்ததுடன். எதிர்கால தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஏற்பாடு, வரவு செலவுத் திட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத நிலையில், மதிப்பீடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, நேற்றையதினம் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply