நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நடவடிக்கைகளின் போது, மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், டிசம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு ரணசிங்கவுக்கு அறிவுறுத்தியது.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது முன்னாள் அமைச்சர் தெரிவித்த கருத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கும், அவரது தொழில் மற்றும் பண்புக்கும் பாதகமானது எனக் கூறி, சட்டத்தரணி திமித்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பியட்ராங்கேலி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற மரபுப்படி, நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.