மேற்கு ஆபிரிக்க நாடான புா்கினா பாஸோவில் அல்-கொய்தாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகளால் பொதுமக்கள் 40 போ் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், புா்கினா பாஸோவில், மாலி எல்லையையொட்டிய ஸீபோ நகரைக் கைப்பற்றுவதற்காக அல்-கொய்தாவுடன் தொடா்புடைய ஜேஎன்ஐஎம் என்ற பயங்கரவாத அமைப்பினா் அந்த நகரை ஓராண்டுக்கும் மேல் முற்றுகையிட்டுள்ளனா்.
இந்த நிலையில், நகருக்குள் நுழைந்து அவா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் பொதுமக்கள் 40 போ் உயிரிழந்தனா். 42 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலின்போது ஜேஎன்ஐஎம் அமைப்பினா் பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்கியது போா்க் குற்றமாகும், என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய தேசங்கள் சிலவற்றின் ஆதரவு பெற்ற பகுழுவினர் புா்கினா பாஸோவின் சுமாா் 50 சதவீத பரப்பை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனா். அவா்களது தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்து, சுமாா் 20 லட்சம் போ் புலம் பெயா்ந்து தவித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. (04)