உலகளாவிய தமிழ் மன்றம் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து இமயமலைப் பிரகடனத்தை கையளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றையதினம் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமூகத்தின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் பன்மைத்துவ இலங்கையை இந்த பிரகடனம் ஊக்குவிக்கிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
இது வரலாற்றுத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.