ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கமானது இன்று காலை 7.35 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000இற்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21ஆம் திகதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் 4.8 ரிக்டர் அளவிலும், நேற்று 4.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இன்றும் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply