வாடிக்கையாளரிடம் வாங்கி உத்தியோகத்தர்கள் பணமோசடி!

வங்கி வாடிக்கையாளர் ஒருவரிடம் 77.98 மில்லியன் ரூபாவை வங்கி உத்தியோகத்தர்கள் சிலர் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் தலஹேன கிளையின் முன்னாள் சம்பத் வங்கி உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் நேற்று பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த வாடிக்கையாளரின்,அனுமதியின்றி 77.98 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக அவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பத் வங்கியின் தலஹேன கிளையில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் கடுவெல நீதவான் நீதிமன்றில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.

இதன்படி வாங்கி கிளையின் முதல் அதிகாரி, முன்னாள் முகாமையாளர், முன்னாள் பிராந்திய முகாமையாளர், எழுதுவினைஞர் மற்றும் கிளை கடன் அதிகாரி ஆகிய ஐந்து வங்கி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் குறித்த பயணத்தடையை விதித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply