பண்டிகை கால சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பும் பொதுமக்களுக்காக அனைத்து நீண்ட தூரப் பயணங்களுக்கும் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படும்.

இதனிடையே, பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நாளை ஆரம்பமாக உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் என்.ஜே.இண்டிபோலேஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் பயணிக்கும் புகையிரதங்களுக்கான விசேட நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

அதன் அடிப்படையில், டிசம்பர் 22
கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை – இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை – மாலை 5:20 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 23
கொழும்பு கோட்டை- பதுளை – காலை 7:30 மணிக்கும் இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
கண்டி – பதுளை – இரவு 7:00 மணிக்கு புறப்படும்.
பதுளை – கொழும்பு கோட்டை – மாலை 5:20 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 24
பதுளை – கொழும்பு கோட்டை – காலை 7:45 மணிக்கு புறப்படும்.
பதுளை – கண்டி – காலை 10:45 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 25
கொழும்பு கோட்டை- பதுளை – காலை 7:30 மணிக்கு புறப்படும்.
கண்டி – பதுளை – காலை 7:00 மணிக்கு புறப்படும்.
பதுளை – கொழும்பு கோட்டை – மாலை 5:20 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 26
கொழும்பு கோட்டை – பதுளை – இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
பதுளை – கொழும்பு கோட்டை – காலை 7:45 மணிக்கு புறப்படும்.
பதுளை – கண்டி – காலை 10:45 மணிக்கு புறப்படும்.
பதுளை – கொழும்பு கோட்டை – மாலை 5:20 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 27
கொழும்பு கோட்டை – பதுளை – காலை 7:30 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 28
பதுளை – கொழும்பு கோட்டை – காலை 7:45 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 29
கொழும்பு கோட்டை – பதுளை – காலை 7:30 மணிக்கு புறப்படும்.

டிசம்பர் 31
பதுளை – கொழும்பு கோட்டை – காலை 7:45 மணிக்கு புறப்படும்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் நாடு பூராகவும் விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply