பாகிஸ்தானில் புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களுக்குத் தடை!

வரவுள்ள புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, அந்த நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கக்கர், ‘போரில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல் வன்முறையில் எல்லை மீறி செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இதுவரை இரண்டுமுறை மனிதநேய உதவிகளை காஸாவிற்கு அனுப்பியுள்ளது. மூன்றாவது முறை உதவிகளை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply