இன்றைய வானிலை அறிக்கை!

இன்று நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் நிலத்தடி உறைபனி நிலவும் என தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பிரதானமாக சீரான காலநிலை நிலவும். காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ க்கு காற்று வடகிழக்கு திசையில் வீசும்.

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் மற்றும் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையிலும் கடற்பரப்புக்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply