சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சென்ற போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தொடர்பில் போதுமான சாட்சியங்கள் காணப்படுமாயின் அதன் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு காணப்படுவதாக மாளிகாகந்த நீதவான் தெரிவித்திருந்தார்.