சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அறகலய போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி அல்லது அரசாங்கத்தை அமைக்குமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்த அமைச்சர்களான பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இராஜாங்க அமைச்சர், திலும் அமுனுகம ஆகியோர் இன்று இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இன்று பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.