வெகு விமர்சையாக நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு!

இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்  எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச. பத்மநாபன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

குறித்த  நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா சகிதம் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

விருந்தினர்களின் மக்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நந்திக் கொடி ஏற்றும் வைபவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

வரவேற்பு உரையை மாநாட்டின் செயலாளர் பேராசிரியர் வி.பவனேசன் நிகழ்தியதுடன் பிரதம விருந்தினர் உரையை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து இரண்டாவது சர்வதேச இந்து மாநாட்டின் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது இந்து கற்கைகள் பீடச்சபையின் ஏகோபித்த ஆதரவுடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக இருந்து தேகாந்த நிலையை அடைந்த அமரர் கு.நகுலேஸ்வர குருக்களுக்கு மெய்ப்பொருள் விருதும், சைவ சமூக பணியாற்றும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனுக்கு ஞானவாய்ச்சியன் விருதும், இலங்கையில் இந்து பண்பாட்டுக்கு உழைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு சிவநிதி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply