ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 24, 25, 26 திகதிகளில் நடைபெறும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை குற்றவியல் நடைமுறை (திருத்த) சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) மற்றும் விஷம், அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் பிரகாரம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply