ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தேச விவாதத்தை சட்டக் கல்லூரி வளாகத்தில் நடத்த விரும்பினால், ஒரு பக்கச்சார்பற்ற நிறுவனம் என்ற ரீதியில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர தாம் தயார் என இலங்கை சட்ட மாணவர் சங்கத்தின் தலைவர் நவோத் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி போன்ற முக்கியமான தலைப்புகளில் விவாதங்களை பரவலாக்குவது தமது முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.