வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் , வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தவுடன் விலைகள் உயரும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து வாகன இறக்குமதி தொடர்பில் 4 வருடங்களாக காத்திருக்கின்றோம். விரைவில் கொண்டுவருவதாக கூறுகின்றார்கள். ஆனால் திகதி நேரத்தை கூறவில்லை. ஆனால் இதுவரை ஏற்றுமதி செய்யப்படவில்லை. நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும்போது, அரசாங்கம் 200% வரி விதிக்கிறது எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.