சம்பள முரண்பாடுகள் குறித்து தீர்மானம் எடுத்துள்ள பந்துல குணவர்தன!

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் விரும்பினாலும் 2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் , 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் தீர்வுகளை முன்மொழிந்து முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply