தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றம் இல்லை!

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு எவ்வித வரியும் அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம் வரை 42,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய நாட்டில் நுகர்வுக்கு போதுமான தேங்காய் எண்ணெய் உள்ளதால், தேங்காய் எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க முடியாது என பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply