2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amid Jayasunadara) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த ஆண்டு 3527 மையங்கள், 535 ஒருங்கிணைப்பு மையங்கள் மற்றும் 33 வட்டார சேகரிப்பு மையங்களில் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் 452, 979 பேர் தோற்றியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இவர்களில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.