க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்களம்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ள நிலையில் www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் திகதி நீடிக்கப்பட மாட்டாது, எனவே குறித்த திகதிக்கு முன்னதாகவே பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர் மூலமாகவோ, தனியார் விண்ணப்பதாரர்கள் மூலமாகவோ அனுப்ப முடியும்.

இதேவேளை தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் அதன் அச்சிடப்பட்ட பிரதியை தங்கள் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இது தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் 1911 அல்லது 0112784208 அல்லது 0112784537 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு வினவ முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply