2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழ் வம்சாவழிப் பெண் வேட்பாளர் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில்
அனைவரினதும் கவனம் ஈர்த்துவந்த பெண் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
தொழில் கட்சி சார்பில், ஸ்டார்போட் பவ் தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன், அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்
வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானியாவில் 8 தமிழர்கள் பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருந்தது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது.
பிரித்தானிய தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றால் அது இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுக்கு வலுவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் உமா குமரனின் வெற்றியானது ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் தாக்கம் செலுத்தும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.