பாடசாலை சீருடை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “அடுத்த வருடத்திற்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதான நிலை தேசிய பாடசாலைகளை தவிர மற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ள அதேவேளை இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் தென் கொரியாவின் கொய்கா நிறுவனம் 85 பில்லியன் டொலர்களை ஓசியன் பல்கலைக்கழகத்திற்கு வழங்க உள்ளது.

இதனைத்தொடர்ந்து , 2700 உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் பலகைகளை பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முழு பாடசாலை வலையமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது அரசின் திட்டமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இன்று (23) உள்ளூர் கடைகளில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply