தமிழக மீனவர் உயிரிழப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு தரவும் மேலும் உயிருடன் இருக்கும் இரண்டு மீனவர்களையும் வழக்கின்றி தாயகம் கொண்டு வர வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 400ற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை படகு மீது மோதியதில் ஒரு படகு மூழ்கியது.

நான்கு மீனவர்கள் உயிரை காப்பாற்ற கடலில் குதித்துள்ள நிலையில் இதில் இரண்டு மீனவர்களை மீட்டு யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மலைச்சாமி என்ற மீனவர் சடலமாக மீட்க்கப்பட்டார்.

குறித்த செயலை கண்டித்து நேற்று இரமேஸ்வரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும் ,அதிகாரியோடு நடந்த பேச்சு வார்த்தையால் போராட்டம் கை விடப்பட்டது

இதனைத் தொடர்ந்து இன்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காலவரையறையற்ற போராடட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply