இன்று இந்தியாவின் சுப்பர் ஸ்ரார் என வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த் பெங்களுரில் சிறுவனாக இருந்தபோது ரவிச்சிந்திரனின் பெரும் ரசிகனாக இருந்ததோடு, ரவிச்சிந்திரன் இரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்தவர்.
ரவிச்சிந்திரனை அன்றையகால ஸ்ரைல் நடிகர் என வர்ணிப்பதுண்டு, அவரிடமிருந்தே ஸ்ரைல் என்ற எண்ணங்கள் ரஜினியின் மனதை கொள்ளை கொண்டது. அதன் காரணமாக பலவிதமான ஸ்ரைல்களையும் செய்து பார்த்திருந்தார் ரஜினிகாந்த். பின்னர் அவருக்கு பாலச்சந்தரால் நடிக்கும் வாய்ப்பக்கள் வழங்கப்பட்டபோது அவர் காட்டிக்கொண்ட ஸ்ரைல்களே அவரை இந்த அளவுக்கு சுப்பர் ஸ்ரார் என்ன அந்தஸ்துக்கு இழுத்துச்சென்றுள்ளது.
இருந்தபோதிலும் ரவிச்சந்திரன் எட்டியும் பார்க்காத இடங்களை தொட்டுநின்ற ரஜினி நினைத்திருந்திருந்தால் தான் ரவிச்சிந்திரனின் இரசிகன் அவரது இரசிகர் சங்க செயலாளராக இருந்தை எல்லாம் மறைத்திருக்கலாம். அவர் அப்படி எதுவும் செய்துகொள்ளவில்லை. பொது மேடை ஒன்றில் தான் ரவிச்சந்திரனுடை மிகப்பெரும் இரசிகன் எனவும், அவரே தனது ரோல் மொடல் என்றும் தெரிவித்திருந்தது மட்டுமன்றி தான் நடித்த, சங்கர் இயக்கத்தில் வெளிந்த சிவாஜி திரைப்படத்தில் இறுதிப்பகுதியில் மொட்டை போட்டுக்கொண்டு வரும் கட்டத்தில் வில்லன் இவரைப்பார்த்து நீங்க சிவாஜிதானே? எனும்போது இல்லை எம்.ஜி.ஆர். என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ரவிச்சந்திரன் என்று குறிப்பிட்டதன்மூலம் இரவிச்சிந்திரனிடம் தன்னிடமிருந்த தீவிர இரசிப்புத்தன்மையினை குறிப்பிட்டிருப்பார்.
ஒரு ரோல் மொடலை கொண்டு அவர்களையே வென்று கௌரவிக்கும் சந்தர்ப்பங்கள் இவைதான்.
கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டோட்டில் பற்றி உங்களுக்த்தெரிந்திருக்கும். அவர் தனது ரோல் மொடல் என்று கருதிக்கொண்ட பிளேட்டோவின் வசிப்பிடமான எதென்ஸ்க்குச் சென்று மூன்றுவருடங்களாக பிளேட்டோவிடம் மாணவராக இருந்து கற்க வேண்டியவைகள் தமது சந்தேகங்கள் என அத்தனையினையும் ஐயமறக் கற்றுக்கொண்டு பின்னர் தான் ஒரு கல்விச்சாலையினை நிறுவி, மேலும் பல தத்துவ ஞானிகளை உருவாக்கியதுடன், இதன்மூலம் உலக மாற்றத்திற்கே பெருவித்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஜனார்த்தனன் –