மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்து!

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28) காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

மும்பையிலிருந்து புறப்பட்ட குறித்த விமானம், இன்று காலை 8:45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோதே விபத்து சம்பவித்துள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானத்தில் அஜித் பவார் உட்பட விமானிகள் மற்றும் உதவியாளர்கள் என நால்வர் இருந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகச் சில முதற்கட்ட இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதுடன், உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஜில்லா பரிஷத் தேர்தல் தொடர்பான நான்கு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக, அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply