தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர விடுதகள் மற்றும் பொட்டிக் வில்லாக்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால் திணைக்களத் தலைவரின் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21 ஆம் திகதி சனி மற்றும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இருப்பினும், மூன்று நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா விடுதகள் மற்றும் பொட்டிக் வில்லாக்கள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய விருந்தினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கலால் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1913, கலால் கட்டளைச் சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களுக்காக 24 மணிநேரமும் திறந்திருக்கும் என கலால் திணைக்களத்தின் பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply