இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை!

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விக்டோரியா மாநில கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்த போது, ​​”தகாத நடத்தை” தொடர்பில் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதையடுத்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின், மாநிலம் அல்லது பிற கிரிக்கெட் சங்கம் அல்லது பிக்பேஷ் அணிகளில் அவர் எந்த பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply