இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இலங்கை திருச்சபை தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருட போராட்டங்களின் உச்சக்கட்டமாக பார்க்கப்படும் மாற்றத்திற்கான தெளிவான ஆணையை மக்கள் வழங்கியதை இலங்கை திருச்சபை அங்கீகரித்துள்ளது.
புதிய ஜனாதிபதி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவதுடன், அவர் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை கவனத்தில் கொண்டு செயற்படுவார் என இலங்கை திருச்சபை தமது அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், சுமூகமான அதிகார பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதுடன் குடிமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு உதவும் வகையில் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும், இன மற்றும் மத சிறுபான்மையினர் மற்றும் ஒதுக்கப்பட்ட குழுக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் புதிய ஜனாதிபதி சேவையாற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கைத் திருச்சபையானது, ஒரு அரசியல்வாதியின் பாத்திரத்தில் இருந்து ஒரு அரசியற் பொறுப்பாளராகவும், உள்வாங்கல் மற்றும் தேசிய ஐக்கியத்தை நோக்கிச் செயற்படுவதற்கும் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்தது.
தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான நாடாளுமன்றத் தேர்தலை உறுதி செய்யுமாறும் புதிய ஜனாதிபதியை இலங்கை திருச்சபை வலியுறுத்தியுள்ளது.