பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்! புதிய பிரதமர் தெரிவிப்பு!

இலங்கையின் பாராளுமன்றம் இன்று (24) கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலாநிதி அமரசூரிய, பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்தார்.

“நான் இப்போது கடமைகளை ஏற்க வேண்டும். அதன்பிறகுதான் நம் வேலையைத் தொடங்க வேண்டும். நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன் நான் கடமைகளை ஏற்கச் செல்ல வேண்டும் எனவும்  “எங்களை நம்பியதற்காக பொதுமக்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அந்த நம்பிக்கையை பாதுகாப்போம்” எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply