பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கண்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் செப்டம்பர் 28 ஆம் திகதி அதிகாலை 1.00 மணி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை 65 மணி நேர நீர் வெட்டு பாதிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, பராமரிப்பு பணிகளுக்காக பொல்கொல்ல நீர்த்தேக்கம் காலி செய்யப்படுவதால் பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இதேவேளை, கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஹரிஸ்பத்துவ, புஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரண நீர் விநியோக அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகள், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இராஜவெல்ல, சிறிமல்வத்த, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான மற்றும் வலால பிரதேசங்கள், பெரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் நீர் விநியோகம் செய்யப்படும் மாவத்தகம பிரதேசம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
நீர்வெட்டு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி தங்கள் ஆதரவை வழங்குமாறும் நீர் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.