நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 2000 ரூபாவிலிருந்து அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, உர மானியம் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதை மாதந்தோறும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.