கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12 திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை (26)விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல் போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும் , சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி V.S.நிரஞ்சன் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,
”இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேவேளை, அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது.”. எனக் கூறியுள்ளார்.