ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுக்கான நேர்காணலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இத்தேர்தலில் புதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வலியுறுத்தினார்.
ஒக்டோபர் 9, 10, 11 ஆகிய திகதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இறுதி அனுமதிகள் மற்றும் வேட்புமனுக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
சமகி ஜனபலவேகயவின் மூத்த மற்றும் புதிய வேட்பாளர்களை இணைத்துக்கொண்டு தமது வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நியமனக் குழுவும் இன்று கூடவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை மாவட்டச் செயலகங்களில் வேட்புமனுத் தாக்கல்கள் இடம்பெற்று வருகின்றன.
பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.