புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் விருப்பம்!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் விருப்பம் தெரிவித்தனர்.

உலக உணவுத் திட்டத்தின் உள்ளூர் பணிப்பாளர் அப்துல் ரஹீம் சித்திக், அரசாங்க பங்காளித்துவ அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத் திட்டத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஜெர்ட் ரெபெல்லோ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply