பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தெமோதர பிரதேசத்தில் தடம் புரண்டமையால், பதுளை – கண்டி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று தடம் புரண்ட இரண்டாவது ரயில் இதுவாகும்.
நேற்று (05) இரவு மருதானையில் இருந்து தெற்கு களுத்துறைக்கு பயணித்த ரயில், ரயில் முனையத்திற்கு சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டமையால் கடலோர ரயில்வேயின் ஒரு மார்க்கம் முற்றிலும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.