77 ஆவது சுதந்திர தின விழா- எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

77ஆவது சுதந்திர தின விழா இந்த வருடம் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதனை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நிகழ்வில் கலந்துக்கொள்ளவதற்கான அழைப்பாளர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும்.

ஜனாதிபதியால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 துப்பாக்கி வணக்கம் இந்த ஆண்டு இடம்பெறாது.

முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மேலும், இராணுவ அணிவகுப்பின் போது ஆயுதம் ஏந்திய வாகனங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படாது என்பதுடன், சுதந்திர தின நிகழ்வில் விமான காட்சிகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply