‘மவுத் வாஷ்கள் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்குமென்பதால், அதைப் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால், வைரஸ் பரவலை குறுகிய காலத்திற்கு குறைக்க முடியும்’ என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
‘தொற்று நோய்கள்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் முக்கியமாக பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருக்கும் போது, இருமல், தும்மல் மற்றும் பேசும்போதும் திரவத்துளிகள் வழியே பரவுகிறது. ஆரோக்கியமான நபரின் மூக்கு, வாய் மற்றும் கண்ணீர் வழியே வைரஸ் தொற்று உள்ளுக்குள் பரவுகிறது.
சில கொரோனா நோயாளிகளின் வாய் மற்றும் தொண்டையில் அதிக அளவு வைரஸ் துகள்கள் அல்லது வைரஸ் சுமை இருப்பதாக ஜெர்மனியில் உள்ள ருர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.