கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலே இருந்த ரஷ்யா தற்போது வேக வேகமாக கேஸ்களை சந்திக்க தொடங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வந்த சமயம் அது. அமெரிக்காவில் அப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கையை கொரோனா வைரஸ் கடந்து இருந்தது. ஆனால் அப்போது ரஷ்யாவில் மட்டும் கொரோனா வைரஸ் பரவாமல் இருந்தது. ரஷ்யாவில் வெறும் 120 பேர் மட்டுமே பிப்ரவரி இறுதியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். ரஷ்யா கொரோனாவிற்கு எதிராக தனது எல்லைகளை மூடி, மிக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இதனால் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாது என்றுதான் கணிக்கப்பட்டது.
ரஷ்யாவும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு தீவிரமாக கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது. இந்தியாவை போலவே ரஷ்யாவிலும் கொரோனா தீவிரம் அடையும் முன் முழு லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டது. அங்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது மே 11 வரை இந்த லாக் டவுன் நீடிக்கப்பட்டுள்ளது.