இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய, அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில், வாங்கப்பட்ட ஒரே காலாண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் தொகை, சுமார் 25 லட்சம் கோடி டொலர்களாக உள்ளது.
அமெரிக்கா, கடந்த 2019ஆம் ஆண்டில், நாடு 1.28 பில்லியன் டொலர்கள் கடன் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.