ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியினால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய சம்பவம் பல ஊடகங்களிலும் தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது.
வொஷிங்டன் நகரில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், சி.பி.எஸ். செய்தியின் வெள்ளை மாளிகையின் ஊடகவியலாளர் வீஜியா ஜியாங், ட்ரம்ப்பிடம்,
‘80,000 இற்க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துவிட்டபோதும், கொரோனா வைரஸ் பரிசோதனையை உலகளாவிய போட்டியாக ஏன் பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ட்ரம்ப், பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும், இது சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த ஊடகவியலாளர், ஐயா, நீங்கள் ஏன் என்னிடம் குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்? என கேட்டார்.
நான் உங்களுக்கு சொல்கிறேன் நான் இதை குறிப்பாக யாரிடமும் சொல்லவில்லை. இது போன்ற ஒரு மோசமான கேள்வியைக் கேட்கும் எவரிடமும் இதைச் சொல்கிறேன் என ட்ரம்ப் கூறினார். இது ஒரு மோசமான கேள்வி அல்ல’ என கூறினார்.
தொடர்ந்து பெண் செய்தியாளரும் மற்ற செய்தியாளர்களும் விடாமல் கேள்விகளை அடுக்கியதால், ஆத்திரமடைந்த கூடியிருந்த ஊடகவியலாளருக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறினார்.