இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் இன்று  வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார் செய்யப்படும் 70 உற்பத்தி பொருட்கள் பெயரிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சீன நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறித்த வரிச் சலுகையானது இம்மாதம் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதுடன், 2021ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்’ என தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் ஏனைய அரிதான உலோக கலவைகளை அடங்குவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த பொருட்களுக்கான இறக்குமதி பெருமானத்தினை சீன நிதி அமைச்சு வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாக வர்த்தக பனிப்போர் நிலவி வரும் நிலையில், குறித்த அறிவித்தலை சீன அரசாங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir