எனது பெயரில் வரும் தவறான கருத்துக்களை எவரும் நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனைய சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன.
இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய வேண்டிவரும்.
எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் வாயிலாக மாத்திரமே பகிரப்படும் என்பனை அறியத்தருவேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.