சீனாவில் சீரற்ற காலநிலையால் மக்கள் வெளியேற்றம்

சீனாவின் ஷங்காய் நகரில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக, கரையோர பிரதேசங்களில் இருந்து 360,000க்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளியானது, மணிக்கு 6.2 கிலோமீற்றர் வேகத்தில் நகர்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஷங்காயில் உள்ள இரண்டு சர்வதேச விமான நிலையங்களில், அனைத்து பயணிகள் விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir