மன்னார் கட்டுக்கரை குளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற் செய்கைக்கான நீர் விநியோக திகதியானது நாளை தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதால் சிறு போக செய்கைக்கு ஈவு முறையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் விரைவாக பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சீ.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்
இன்று மதியம் 12 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியளாலர் சந்திபின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 11 திகதி இடம் பெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 1250 ஏக்கர் நெற்செய்கையும் 400 ஏக்கரில் உப தானிய பயிர்செய்கையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளதாகவும் அந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போது நீர்பாசன பணிப்பாளர் 1250 ஏக்கர் பயிர்செய்கை மேற்கொள்வதற்கு குளத்தின் நீர் மட்டம் 10 அடியாக இருக்க வேண்டும் எனவும் அன்றைய நிலையில் 7.8 அடியாகவே நீர் காணப்பட்டதாகவும் தற்போதைய நிலையில் நீர்வரத்தை கணிக்கும் போது 9.3 அடியாகவே நீர் மட்டம் காணப்படுவதாகவும் என்னும் 10 அடியை அடைய வில்லை எனவும் எனவே மேலதிக நீர் வரவு அல்லது கொள்வனவு என்பது சாத்தியமற்றதாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்