ஆகஸ்ட் மாதளவில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலவரப்படி மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
நுரைச்சோலையின் முதலாவது அலகு ஜூன் மாதத்திலும், இரண்டாவது அலகு ஜூலை மாதத்திலும் பராமரிப்புக்காக மூடப்படவுள்ளன.
அத்துடன் களனிதிஸ்ஸ மற்றும் வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கப்படவுள்ளன.
திட்டமிடப்பட்ட 25 கப்பல்களில் இதுவரை 11 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளன. ஏப்ரல் 20-ஆம் திகதிக்குள் 20 கப்பல்களைக் கொண்டுவரத் தவறினால், ஆகஸ்ட் 27-ஆம் திகதியளவில் நுரைச்சோலை மின் நிலையம் முற்றாக முடங்கும் என அவர் எச்சரித்தார்.
